

“சென்னை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கவுரவம் பாராமல் தேசிய புலனாய்வுக் குழு விசா ரணைக்கு தமிழக அரசு சம்மதிக்க வேண்டும்” என பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்தார். இதுகுறித்து ஈரோட்டில் அவர் அளித்த பேட்டி:
சென்னையில் கவுகாத்தி ரயிலில் வியாழக்கிழமை வெடித்த வெடிகுண்டுகள், ஆந்திரத்தில் திருப்பதி மற்றும் காளஹஸ்தி பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு இருந்த மோடியை குறி வைத்தோ அல்லது அவர் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒரு பதற் றத்தை உருவாக்க வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் என்பதில் எங் களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அந்த ரயில் சென்னையை கடந்து கவுகாத்தி நோக்கி செல்லும்போது சென்னைக்கு அடுத்ததாக உள்ள ரயில் நிலையம் திருப்பதிக்கு மிக அருகாமையில் உள்ள ரயில் நிலையமாகும். அங்கு அதை வெடிக்கச் செய்ய வேண்டும் என புறப்பட்டவர்களுக்கு ரயில் காலதாமதம் ஆனதால் சென்னை யில் வெடித்துள்ளதாக கருது கிறோம்.
தமிழக அரசு இந்த விஷயத்தை கவுரவ பிரச்சினையாக பார்க் காமல், குண்டு வெடிப்பு விசார ணையை தேசிய புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைப்பதுதான் குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடிக்க உதவும் எனக் கருதுகிறேன். தமிழக டிஜிபி ராமானுஜம், தமிழ கத்தை குறிவைத்து குண்டு வைக்கவில்லை என்று சொல்லி யுள்ளார். எனவே, இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வுக் குழு விசாரிப் பது பொருத்தமாக இருக்கும். மேலும், தமிழக சிபிசிஐடி பிரிவைக் காட்டிலும், தேசிய புலனாய்வுக் குழுவுக்கு போதுமான பயிற்சி, ஆட்கள், உபகரணங்கள் இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வு என்பதில் கூட்டணி கட்சிகளி டையே வேறுபாடு இருக்கலாம். உடனடியாக செய்ய வேண்டிய விஷயங்களில் கூட்டணி கட்சிகள் உடன்பட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.