சேத்துப்பட்டில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை திறப்பு: நடிகர் விஷால் திறந்து வைத்தார்
சென்னை சேத்துப்பட்டில் புதி தாக டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையை நடிகர் விஷால் திறந்து வைத்தார்.
டாக்டர் அகர்வால் கண் மருத் துவமனை, டாக்டர் குல்கர்னியுடன் இணைந்து சென்னை சேத்துப் பட்டில் புதிதாக டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது. மருத்துவமனை தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் அமர் அகர்வால் விழாவுக்கு தலைமை தாங்கினார். மருத்துவமனை இயக்குனர் டாக்டர் அத்தியா அகர்வால், டாக்டர் மஞ்சு குல்கர்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஷால் மருத்துவமனையை திறந்து வைத்தார்.
விழாவில் டாக்டர் அமர் அகர்வால் பேசுகையில், “மக்களுக்கு மிகத்தரம் வாய்ந்த நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்களால் விழித்திரைகள் பாதிக்கப்படுகின்றன. சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சைப் பெற வேண்டும். இதனால் பார்வை இழப்பை தவிர்க்க முடியும்” என்றார்.
விழாவில் நடிகர் விஷால் பேசுகையில், “57 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கண் நல சிகிச்சை அளித்து வரும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் புதிய கிளையை திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த புதிய மருத்துவமனையில் மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் தரமான கண் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.
