Published : 30 Jun 2015 07:50 AM
Last Updated : 30 Jun 2015 07:50 AM

என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி.) தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக என்எல்சியின் தலைமை மண்டல மேலாளர் எம்.மகேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:-

நெய்வேலியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான என்எல்சியில் சுரங்கம் தோண்டும் பணி நடக்கிறது. அனல் மின் நிலையம் மூலம் 3 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இங்கு, 16 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தவிர ஒப்பந்த தொழிலாளர்களும் இருக்கின்றனர்.

2012-2016-ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர் பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப் பினும், தகுதியான தொழிலாளர் களுக்கு மாதம் ரூ.1500 முதல் ரூ.4700 வரை இடைக்கால முன் பணம் வழங்கப்படுகிறது. 2012-ம் ஆண்டுமுதல் இது நடைமுறையில் இருக்கிறது.

தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கமும், என்எல்சி அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கமும் பேச்சுவார்த்தையின்போது அள வுக்கு அதிகமான சம்பளம் உள் ளிட்ட கோரிக்கைகளை முன்வைத் ததால் உடன்பாடு எட்டப்பட வில்லை.

அதனால், வரும் ஜூலை 2-ம் தேதிமுதல் வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன. கடந்த 23-ம் தேதி நடந்த பேச்சு வார்த்தையின்போது, இப்பேச்சு வார்த்தை முடியும்வரை எந்தப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்று மண்டல தொழிலாளர் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதையும் மீறி போராட்டம் அறிவித்திருக்கிறார்கள்.

தொழிற்சங்கங்கள் போராட் டத்தில் ஈடுபட்டால் என்எல்சியில் மின் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், சுரங்கம் தோண்டும் பணியும் வெகுவாகப் பாதிக்கும். எனவே, என்எல்சி வளாகம் அல்லது நுழைவுப் பகுதி உள்பட எந்த இடத்திலும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் உட்பட எவ்வித போராட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண் டும் என்று மனுவில் கோரப் பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜா முன்பு இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது என்எல்சி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x