

“ரயில், பேருந்துகளில் பயணம் செய்ய ஒரே மாதிரியான ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’’ என டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதன்மை ஆலோசகரும், கேரள மாநில திட்ட ஆணையத்தின் உறுப்பினருமான டாக்டர் இ.ஸ்ரீதரன் கூறியுள்ளார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி) கட்டப்பட்டு 50-ம் ஆண்டுகள் ஆனதையொட்டி பொன் விழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத் தின் முதன்மை ஆலோசகரும், கேரள மாநில திட்ட ஆணையத்தின் உறுப்பினருமான டாக்டர் இ.ஸ்ரீதரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
டெல்லியில் மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சி யால் மேற்கொள்ளப்பட்டது. 10 ஆண்டுகளில் இத்திட்டத்தை செயல் படுத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பெருகி வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை 7 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள தன் மூலம் வாகனங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந் துள்ளது. இதன் மூலம், 70 டன் அள வுக்கு வாகனப் புகை கட்டுப்படுத் தப்பட்டுள்ளது. டெல்லியில் முன்பு நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 பேர் சாலை விபத்தில் உயிர் இழந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 10 நகரங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயிலை எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிறுவனத்துடன் இணைக்க வேண்டும். அதேபோல், ரயில், பேருந்துகளில் பயணம் செய்ய ஒரே மாதிரியான ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது அவசியமான ஒன்றாகும்.
இவ்வாறு ஸ்ரீதரன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மூத்த விஞ் ஞானிகள் டாக்டர் கே.ரவிசங்கர், டாக்டர் கே.பாலாஜி ராவ், சி. ஜெயபால் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.