Published : 26 May 2014 08:03 AM
Last Updated : 26 May 2014 08:03 AM

ராஜபக்சே விவகாரத்தில் தடுமாறும் தமிழக கட்சிகள்: பதவியைக் காட்டி கூட்டணி கட்சிகளுக்கு ‘செக் வைத்த பாஜக

மோடியின் பதவியேற்பு விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்‌சே பங்கேற்கும் விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் அணுகு முறை முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. பின்னணியில் அமைச்சரவையில் பங்கு, மாநிலங் களவை உறுப்பினர் பதவி, வழக்கு களிலிருந்து தப்பிப்பது போன்ற பல்வேறு காரணங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

ராஜபக்சே வருகை பற்றி கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், இலங் கையுடன் நட்புறவாக இருப்பதே ராஜதந்திரம் என்றார். ஆனால், அவரது நிலைப்பாட்டுக்கு எதிராக ராஜபக்‌சேவை அழைத்திருப்பதை ஜி.கே.வாசன் கண்டித்துள்ளார்.

திமுகவும் மோடி பதவி யேற்பு விவகாரத்தில் மென்மை யான போக்கையே வெளிப்படுத்தியுள்ளது. வழக்கமாக இதுபோன்ற நேரங்களில், தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான டெசோவைக் கூட்டி போராட் டங்களை அறிவிக்கும் கருணாநிதி, தற்போது ‘ராஜபக்‌சே பங்கேற்க வேண்டுமா என்பதை, மத்திய அரசு மீண்டும் ஒருமுறை சிந்தித்து அந்த முயற்சியைக் கைவிடுமாறு வேண்டுகிறேன்’ என்று கூறி அறிக்கை விடுத்துள்ளார். பாஜக அரசு மீது திமுகவின் மென்மை யான போக்குக்கு 2ஜி வழக்கும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘ராஜபக்‌சேவை மட்டும் இந்த விழாவுக்கு அழைத்திருந்தால் தேமுதிக பங்கேற்றிருக்காது,' என்று கூறி, விழாவில் பங்கேற் பதை மறைமுகமாக உறுதி செய்திருக்கிறார். மேலும் தேமுதிக இளைஞரணித் தலைவர் சுதீஷுக்கு மந்திரி பதவியும், மாநிலங்களவை எம்பி பதவியும் பாஜக வழங்கும் என்ற தகவல் இருப்பதால் தேமுதிக கடுமையாக எதிர்க்கவில்லை என்று தெரிகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் தன் பங்குக்கு, ‘ராஜபக்‌சேவை அழைக்கும் முடிவை மறுபரி சீலினை செய்ய வேண்டும்’ என்று மட்டும் கூறியுள்ளார். இதன் மூலம், பதவியேற்பு விழாவை பாமகவும் புறக்கணிக்காது என்பது தெளிவாகிவிட்டது. கடந்த 2008-ல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது, மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு விதிமீறி அனுமதி அளித்தது தொடர்பாக அவர் மீது சிபிஐ வழக்கு நிலு வையில் உள்ளது. இதனால், அவருக்கு அமைச்சரவையில் பதவி வழங்குவதை பாஜக இன்னும் உறுதி செய்யவில்லை. இந்நிலையில்தான் ராஜபக்சே விவகாரத்தில் நெருக்கடி கொடுக்க வேண்டாமென முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதிமுகவைப் பொறுத்தவரை, வைகோவுக்கு ராஜ்யசபா பதவி கிடைப்பதில் பல சிக்கல்கள் உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், ராஜபக்‌சேவின் வருகைக்கு எதிரான போராட்டத்தை வைகோ கையிலெடுத்துள்ளார். அதேநேரம் போராட்டம் ஒருபுறம் இருந்தாலும் பதவியேற்பு விழாவில் பங் கேற்பது குறித்து வைகோ இன் னும் முடிவெடுக்கவில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x