விலையில்லா பொருட்களால் ஒரு கோடி பேர் பயன்

விலையில்லா பொருட்களால் ஒரு கோடி பேர் பயன்
Updated on
1 min read

திருத்தணி சட்டப் பேரவை தொகுதிக் குட்பட்ட 10 ஊராட்சிகளில் 11,353 குடும்பங்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா நேற்று நடந்தது.

விழாவில் அமைச்சர் ரமணா பேசியதாவது: தமிழ்நாட்டில் விலை யில்லா அரிசி பெறும் 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டை வைத்தி ருப்பவர்களில், 90 லட்சம் குடும்பத் தினருக்கு விலையில்லா மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப் பட்டுள்ளது. 4-ம் கட்டமாக 45 லட்சம் குடும்பங்களுக்கு ஜூலை மாதத் துக்குள் வழங்கி முடிக்கப்படும் . அதன் பிறகு, 5-வது கட்டமாக 45 லட்சம் குடும்பங்களுக்கு டிசம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும்.

இந்தியாவிலேயே ஒரே அரசு நலத் திட்டத்தில் ஒரு கோடிக்கு மேலான மக்கள் பயன்பெற்று இதுவே முதல்முறையாகும் என்று அவர் பேசினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in