Published : 10 Jun 2015 07:53 AM
Last Updated : 10 Jun 2015 07:53 AM

பொதுமக்கள் எதிர்ப்பை மீறி விவசாய நிலத்தில் மின்கோபுரம்

திருப்போரூர் அடுத்த காயார் கிராமப் பகுதியில், காற்றாலை மின்சாரம் கொண்டு செல்வதற்காக விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் துணை யோடு மின்வாரிய ஊழியர்கள் மின்கோபுரம் அமைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கயத்தாறு பகுதியில் தயாரிக்கப் படும் காற்றாலை மின்சாரத்தை தென்சென்னை பகுதியின் பயன் பாட்டுக்கு கொண்டு வருவதற் காக, கயத்தாறு பகுதியிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்தியம் பாக்கம் துணை மின்நிலையம் வரை, உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காயார் பகுதி விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க திட்ட மிடப்பட்டது. எனினும், விவசாய நிலங் களில் மின்கோபுரங்கள் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பணிகள் நிறுத்தப்பட்டன. மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதை தடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, காயார் கிராமத்தில் மின்கோபுரங்கள் அமைக்கும் பணியை மின்சார வாரிய ஊழியர்கள் நேற்று தொடங் கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர் செல்வம் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து, போலீஸ் துணையோடு உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. அசம்பாவிதங் களை தவிர்க்க அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டனர்.

இதுகுறித்து, காயார் கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள மண் தன்மைக்கு சவுக்கு விவசாயம் மட்டுமே பெரும்பாலும் செய்ய முடியும். விவசாய நிலத்தில் மின்கோபுரங்கள் அமைக்கப் பட்டால், அதிக உயரம் வளரக் கூடிய சவுக்கை பயிரிட முடியாத நிலை ஏற்படும். இதனால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர் செல்வம் கூறியதாவது: பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், நிவாரணம் வழங்க மின்வாரியம் தயாராக உள்ளது. சில ரியல் எஸ்டேட் அதிபர்கள் சுயலாபத் துக்காக மக்களை துண்டி விட்டுள்ளதாக தெரிகிறது. மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x