

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்று வதற்காக அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ந.சேதுராமன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள அஇமூமுக முடிவு செய்துள்ளது. அதன்படி ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் பணியாற்றுவதற்கான தேர்தல் பணிக்குழுவும் அமைக் கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ச.இசக்கிமுத்து தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பணிக் குழுவில், பொருளாளர் எஸ்.ஆர்.தேவர், தலைமைக்கழகச் செயலாளர் மா.குருசாமி, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் எம்.கே.செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பிரச்சாரப்பணிகளில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.