

சீமாந்திரா முதல்வராக பொறுப்பேற்கவுள்ள தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில்: "கடின உழைப்பாலும், அரசியல் சாதுர்யத்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளீர்கள். மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் அரசியல் களத்தில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ளீர்கள். அதற்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் தலைமையின் கீழ் சீமாந்திரா அமைதியாக இருக்கும். மேலும், அங்கு நல்லாட்சி நடைபெறும் என நம்புகிறேன்" இவ்வாறு கருணாநிதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.