

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அனைத்து அமர்வுகளுக்கும் ஜூன் 1 முதல் 30-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாய முதன்மை அமர்வு வெளி யிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு ஜூன் 1 முதல் 30-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் டெல்லியில் உள்ள முதன்மை அமர்வு விடுமுறைக் கால விசாரணையை நடத்தும். அவசர வழக்குகள் இருந்தால், அவற்றை அந்தந்த மண்டல அமர் வுகளில் தாக்கல் செய்யலாம். அவை விடு முறைக் கால நீதிமன்றத்துக்கு மாற்றப்படும்.