

ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டமன்றத்தில் 1986-ம் ஆண்டு வரை சட்ட மேலவை இயங்கி வந்தது. ஆனால் 1986-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., சட்ட மேலவையை திடீர் என கலைத்தார். பின்னர் திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் சட்ட மேலவை கொண்டு வர முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி நிறைவேறவில்லை.
சட்டப்பேரவை தேர்தல் களத்தில் அறிவும், திறமையும் உள்ளவர்கள் சில காரணங்களால் போட்டியிட தயங்குகின்றனர். அப்படிப்பட்டோரின் அறிவுரைகள் ஆட்சியாளர்களுக்கு கிடைக்க சட்டமேலவை மிக அவசியமான ஒன்றாகும். எனவே தமிழக அரசு அனைத்து கட்சி பிரதிநிதிகளை கூட்டி விவாதம் நடத்தி தமிழகத்தில் சட்டமேலவையை கொண்டுவருவதற்கான தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.