

வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளிக்க அரசு முன்வர வேண்டும் என நடிகை ஷகிலா தெரிவித்தார். இந்திய திருநங்கைகளின் கலை விழா மதுரையில் ஜுலை 26-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரையில் செய்தியாளர்களிடம் நடிகை ஷகிலா நேற்று கூறியதாவது:
திருநங்கைகளுக்கு ஆதரவு அளிப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. திருநங்கைகள் பாலியல், பிச்சையெடுக்கும் தொழில்களில் ஈடுபடுவதாகப் பலர் கூறி வரு கின்றனர். ஆனால், எனது வீட்டில் ஓட்டுநர், உதவியாளர், சமையல் உள்ளிட்ட பணிகளில் திருநங்கைகளையே ஈடுபடுத்தியுள்ளேன். இதுபோல ஒவ்வொருவரும் திருநங்கைகளுக்கு பணிகளில் வாய்ப்பளிக்க வேண்டும்.
திருநங்கைகளிடம் நிறைய திறமைகள் உள்ளன. அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரவே மதுரையில் ஜுலை மாதம் 26-ம் தேதி இந்திய திருநங்கைகளின் மாபெரும் கலை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கை களின் கிராமியக் கலைகள், நாட்டிய நாடகங்கள், கலாச்சார ஆடை அணிவகுப்புகள் நடைபெற உள்ளன.
நீதிமன்ற வழக்கு ஒன்றில் ராதா ரவி எனக்கு ஆதரவாக இருந்தார். எனவே நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவி, சரத்குமார் அணிக்கே நான் ஆதரவு தெரிவிப்பேன் என்றார்.