Published : 03 Jun 2015 01:00 PM
Last Updated : 03 Jun 2015 01:00 PM

ட்வீட்டாம்லேட்: வாழ்த்துகள் சொல்லும் கருணாநிதியின் சிறப்பு அம்சங்கள்

திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 92-வது பிறந்தநாள். தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.

இதையொட்டி உருவாக்கப்பட்ட >#HBDkalaingar என்ற ஹேஷ்டேக், ட்விட்டர் டிரெண்டிங்கில் முன்னிலை வகித்துள்ளது.

இதைத் தவிர ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ் என அனைத்து சமூக வலைதளங்களிலும் #kalaignar92, #HBDMK, #கலைஞர் 92, #கலைஞர்கருணாநிதி ஆகிய ஹேஷ்டேகுகள் மூலம் வாழ்த்துகளுடன், கருணாநிதியின் சிறப்பியல்புகளையும் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில இன்றைய ட்வீட்டாம்லேட்டில்..

நெற்றிக்கண் ‏@thirupgp - விவேகம் என்னும் வெள்ளி முளைத்து சாதி மதப் பித்து என்னும் சனி தொலைந்தால் தான் சமத்துவம் என்னும் ஞாயிறு பிறக்கும் #HBDkalaingar.

கண்டமன்னூர் ஜமீன் ‏@kadalpuraa - குறை சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம். வடக்கத்தியர்களுக்கு இன்றுவரை சிம்ம சொப்பனமாக இருப்பது கருணாநிதி மட்டும் தான்.

Sri Sri Sri Sri Ravi ‏@senthazalravi - கலைஞர் மீது உள்ளூர ஒரு அன்பு இருக்கும். ஆனால் வெளியே சொல்லாதவர்கள் இன்று சொல்லிவிடுங்கள் ஒரு வாழ்த்தின் மூலம் #HBDKalaignar.

Alex Pandian ‏@AxPn - திமுக தலைவைர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் வாழ்க ! @kalaignar89 #HBDkalaingar.

ரா. செல்வக்குமார் ‏@rskx4819 - கலைஞர் இல்லாத தமிழக அரசியல் என்றுமே வெற்று இடம், அதை யாரும் ஆக்க முடியாத வெற்றி இடம், திமுக தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள்.

Jothimani ‏@jothims - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளை எல்லாம் தாண்டி அவரது கடும் உழைப்பும்,ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நெடிய அரசியல் வாழ்வை அவர் எதிர்கொண்ட விதமும் பாராட்டுக்குரியவை.

Satheesh Kumar ‏@saysatheesh - தன்னைப் பற்றிய தவறான புரிதலோடு விமர்சிப்பவர்களின் நலனுக்காகவும் சேர்த்தே போராடும் போராளி கலைஞர் #HBDKalaignar#Kalaignar92.

அட ஆச்சரியக்குறி ‏@tamilFacts - 14 வயதில் மாணவ நேசன் என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை துவக்கிய கலைஞர்! இன்று தன்னுடைய 92 வயதிலும் முரசொலியைத் திருத்துகிறார்! #HBDkalaingar.

Ethir Katchi ‏@sudhanks - கலைஞர் Tag பண்ணி ட்விட்டர்ல திட்டுற மாதிரி, அம்மா'வ திட்ட முடியாது!! அந்தக் கருத்து சுதந்திரம் தான் கலைஞர்!! #கலைஞர்92.

ராஜாதிராஜன் ‏@isai_ - தீரா தமிழ்காதலுக்கு நீரூற்றிய தகைசால் தலைவன் நிகரில் பெருமகன், ஓயா உழைப்பினன், பண்பாட்டின் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDkalaingar.

ஐயம்பேட்டை ‏@vetry1432 - வயது ஏற ஏற புத்திக்கூர்மை அதிகமாகும் ஒரே மனிதர். #HBDkalaingar.

இளவரசன் ‏@izhavarasan - அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி தந்த கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDkalaingar.

கயல்விழி ‏@kayal_v - என்றும் உதய சூரியனாய் விளங்கும் தமிழ்த் தலைவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ..!! #HBDkalaingar.

Aravind ‏@Aldk86 - 'தூக்குமேடை' நாடகத்தின் போது MR.ராதா கருணாநிதி அவர்களுக்கு 'கலைஞர்' என பட்டமளித்தார்! இன்றும் அப்பெயராலேயே அழைக்கப்படுகிறார்! #HBDkalaingar"

ரா. செல்வக்குமார் ‏@rskx4819 - எப்படி பார்த்தாலும் ஒரேஅர்த்தம்: திருவாரூர். முத்தமிழறிஞர். கலைஞர் = தி.மு.க = திரு.மு.கருணாநிதி.

டேய்மோசக்காரா ‏@mosakkara - கருணாநிதி தலையை சீவினா பரிசு என ஃபத்வா அறிவிச்சப்ப, என் தலையை நானே சீவுனதில்லைன்னு பதிலடி தந்த நகைச்சுவையே! #HBDKalaignar

ஏகலைவன் ‏@vkumaru - வலிமையான இயக்கத்தின் தலைவனாக தொடரும் 92 வயது சுறுசுறுப்புக்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்துவோம்.#HBDkalaingar.

கார்த்திகைப்பூ ‏@godwinrajjb - என்னை கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைஞர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x