இந்திய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விற்பனை

இந்திய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விற்பனை
Updated on
1 min read

ஆயுர்வேதா, யோகா - இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய 5 படிப்பு களை உள்ளடக்கிய இந்திய மருத் துவம் மற்றும் ஓமியோபதி படிப்பு களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் 29-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்தா மருத்துவ கல்லூரி , சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்தா மருத்துவ கல்லூரி, அரசு யுனானி மருத்துவ கல்லூரி, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவ கல்லூரி, நாகர்கோவிலில் உள்ள அரசு ஆயுர்வேதா மருத்துவ கல்லூரி ஆகிய 6 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதனை தவிர்த்து 21 தனியார் மருத்துவ கல்லூரிகளில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ படிப்புகள் உள்ளன.

அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள சித்தா (பி.எஸ்.எம்.எஸ்), யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (பி.என்.ஒய்.எஸ்), ஓமியோபதி (பி.எச்.எம்.எஸ்), யுனானி (பி.யு.எம்.எஸ்), ஆயுர்வேதா (பி.ஏ.எம்.எஸ்) ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு மொத்தம் 236 இடங்கள் உள்ளன.

இந்த மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் 29-ம் தேதி (இன்று) முதல் சம்பந்தப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை செய்யப்படுகின்றன. வரைவோலையை இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி, சென்னை - 106 என்ற பெயரில் எடுக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை ஜூலை 31-ம் தேதி மாலை 5 மணிக்கு முன்பாக அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை 600106 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in