

செஞ்சி அருகே களவாய் கிராமத்தில் வசிக்கும் வேலியப்பன் (75), அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் (80) ஆகிய இருவரும் நேற்று முற்பகல் திடீரென மயங்கி விழுந்தனர். வேலியப்பனை அருகில் உள்ள மேல் சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், கண்ணனை செஞ்சி அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பணியிலிருந்த மருத்துவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரி வித்தனர்.
இதையடுத்து இருவரும் கள்ளச்சாராயம் குடித்து இறந்துவிட்டதாக தகவல் பரவியது. இது தொடர்பாக செஞ்சி இன்ஸ்பெக்டர் ரவியை தொடர்புகொண்டு கேட்டபோது, அவர்கள் இருவரும் வெயில் கொடுமை தாங்காமல் இறந்துள்ளனர் என்றார்.