Published : 09 Jun 2015 08:00 AM
Last Updated : 09 Jun 2015 08:00 AM

ஆவடி கனரக தொழிற்சாலை: தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மேலும் 5 பேர் கைது

ஆவடி கனரக தொழிற்சாலையில் பயிற்சிக்கான எழுத்துத் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்த மேலும் 5 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலையில் பயிற்சி பெறுவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த மார்ச் மாதம் ஆவடியில் நடந்தது. இதில், 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி கடந்த 5-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை நடந்தது. இதில், 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடந்த சான்றிதழ் சரிபார்க்கும் பணியின்போது, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேரின் கைரேகைகளும், அவர்கள் தேர்வு எழுதிய போது பதிவு செய்யப்பட்ட கை ரேகைகளும் பொருந்தவில்லை. அவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது அம்பலமானது. இதையடுத்து அவர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் பீஹாரைச் சேர்ந்த பிரதேஷ் குமார்(20), கோவிந்த குமார் ஷா(19), ஷிவம் குமார்(21), சந்தீப் குமார் (19), விக்ரம் குமார் (19) ஆகிய 5 பேரின் கைரேகைகள், அவர்கள் தேர்வு எழுதியபோது பதிவான கைரேகையுடன் பொருந் தவில்லை.

விசாரணையில் அவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தெரியவந்தது. இதையடுத்து, பிரதேஷ்குமார் உள்ளிட்ட 5 பேரையும் ஆவடி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

16 பேர் கைது

இந்த 5 பேரையும் சேர்த்து, ஆவடி கனரக தொழிற்சாலையில் பயிற்சிக்கான எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x