

கட்டுமான தொழிலாளர்களுக்கு தங்குமிடம், மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய வசதி களை செய்துதர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க இயக்குநர் சி. ஞானசேகர பாபுராவ் கூறி யுள்ளார்.
தொழிலக பாதுகாப்பு, சுகா தார இயக்ககம் மற்றும் இந்திய கட்டுமான சங்கம் இணைந்து கட்டு மான தொழிலாளர்களுக்கான பணியிட பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னையில் நேற்று நடத்தியது. இந்நிகழ்ச்சியில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் சி. ஞானசேகர பாபு ராவ், இந்திய கட்டுமான சங்கத்தின் தென்மண்டல தலை வர் ஒ.கே.செல்வராஜ், முன்னாள் அகில இந்திய தலைவர் ஆர்.ராதா கிருஷ்ணன், கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் துறையின் மூத்த கூடுதல் இயக்குநர் பி.போஸ் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சி.ஞானசேகர பாபு பேசியதாவது:
கட்டுமான பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிப்பதற்காக தமிழக அரசு ரூ.32 லட்சம் சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளது. மேலும், கட்டுமான தொழிலாளர்களுக்காக தங்குமிடம், நடமாடும் மருத்துவ வசதி மற்றும் அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்காக அங்கன்வாடி உள்ளிட்ட வசதிகளை கட்டுமான தொழிலாளர்களின் நலவாரியம் மூலம் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசு கட்டுமான பாதுகாப்பு சட்டத்தை 1996-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 1998-ம் ஆண்டு அதில் 252 விதிகள் சேர்க்கப்பட்டன. தமிழக அரசு இச்சட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு முதல் அமல்படுத்தி வரு கிறது. இதன் மூலம், கட்டுமான தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் பணியிடத்தில் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் கட்டுமான நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு ஞானசேகர பாபு ராவ் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங் களைச் சேர்ந்த பொறியாளர்கள், சூப்பர்வைசர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங் கேற்றனர். அவர்களுக்கு கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழி லாளர்களுக்கான பணியிடப் பாதுகாப்பு குறித்த கையேடுகள் வழங்கப்பட்டன.