

மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்த தமிழகத்துடன் புதுச் சேரி ஊரகவளர்ச்சித்துறை ஒப்பந்தம் செய்து பயிற்சி அளிப்பது தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கிராமப்புறங்களில் வளர்ச்சித் திட்டங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான திட்டங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. தற்போது ஊரகவளர்ச் சித்துறை தமிழகத்துடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் கூறும்போது:
புதுச்சேரியில் மொத்தம் 98 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு 2300 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக்குழு செயல் பாடுகளை மேம்படுத்த திட்ட மிட்டு பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு உருவாக்கப் படுகிறது. புதுச்சேரியில் 30 பஞ்சாயத்துகள் அளவில் மகளிர் கூட்டமைப்பை உருவாக்க திட்ட மிட்டுள்ளோம். முதல்கட்டமாக 10 கூட்டமைப்புகள் தொடங்கி யுள்ளோம். ஒரு கூட்டமைப்புக்கு ரூ.60,000 வரை சுழல்நிதி தரப்படும். இதில் ரூ.18 ஆயிரத்துக்கு வட்டியில்லை.
தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களை மேம்படுத்த உள்ளோம். இதனால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி தர தமிழக அரசின் புதுவாழ்வுத் திட்டத்துடன் ஒப்பந்தம் செய்துள் ளோம்.
புதுவாழ்வு திட்ட அதிகாரி கள் புதுச்சேரியிலுள்ள மகளிர் கூட்டமைப்பினருக்கு, தங்கள் பதிவேடுகளை பராமரிப்பது, கிராமப்புறங்களில் மேற்கொள்ளக் கூடிய தொழில்கள், திறன் மேம்பாடு, நிதி மேலாண்மை ஆகியவற்றில் பயிற்சி தருகின்றனர் என்று அவர்கள் கூறினர்.