Published : 24 Jun 2015 07:39 AM
Last Updated : 24 Jun 2015 07:39 AM

உப்பூரில் ரூ.9,600 கோடியில் அனல் மின் நிலையம்: ஒப்பந்தம் கோரியது மின்வாரியம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகில் உள்ள உப்பூரில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளில் 1600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான அனல் மின் நிலையத்தை ரூ.9,600 கோடியில் அமைக்க தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் திட்டமிட்டது.

இத்திட்டத்துக்கு 2011, அக்டோபர் மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து 2012 மே மாதம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது.

இத்திட்டத்துக்கு ஆண்டொன் றுக்கு தேவைப்படும் 5.53 மில்லியன் டன் நிலக்கரியில் 30 சதவீதம் உள்நாட்டில் கிடைப்பதில் இருந்து பயன்படுத்தலாம் என்றும் கிடைக்காவிட்டால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யும் பட்சத்தில், அதை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மணியாச்சி, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக உப் பூருக்கு கொண்டுவரவும், இதற் காக தேவைப்படும் ரயில் பாதை அமைக்கவும் முடிவெடுக் கப்பட்டது.

மேலும் இத்திட்டத்துக்காக உப்பூர் பகுதியில் 1,342 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடி வெடுக்கப்பட்டு, இது தொடர்பான கருத்து கேட்பும் கடந்தாண்டு அம் மாவட்ட ஆட்சியர் தலைமை யில் நடத்தப்பட்டது. கலெக்டரும் கருத்துக்களை கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பினார். ஆனால், அதன் பின் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. அரசியல் கட்சிகள், அப்பகுதி மக்கள், தன்னார்வ அமைப்புகள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உப்பூரில் அனல் மின்நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கோரியுள்ளது.

அதில் திட்டத்தை வடிவமைத் தல், மின் உற்பத்தி, விநியோகம், நிறுவுதல், சோதித்தல் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் போன்ற அனைத்து பணி களுக்குமான ஒப்பந்தம் கோரப்பட் டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி, ஒப்பந்த ஆவணம் சமர்ப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x