

நதி நீர் இணைப்பை மோடி அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணியின் நிறுவனர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பொள்ளாச்சியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 16-ம் தேதி ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்து எனக்கு மிரட்டல் கடிதம் வந்தது. அதில், ஜாகீர் உசேனை விடுதலை செய்ய வேண்டும், இதுதான் இறுதி எச்சரிக்கை என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கடிதம் அனுப்பிய நபர் யாரும் அங்கு இல்லை எனக் காவல் துறையினர் தெரிவித்து விட்டனர்.
தமிழக அரசு பயங்கரவாதி களைக் கண்டு பயந்து நிற்கிறது. முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை இந்துக்களுக்கு வழங்குவதில்லை. ஏனென்றால் சிறுபான்மையினரின் வாக்குகள் அவர்களுக்கு அவசியம்.
சர்தார் வல்லபாய் படேலுக்குப் பிறகு இந்தியாவின் இரும்பு மனிதராக மோடி உருவெடுத் துள்ளார். அவரிடம் மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக நதி நீர் இணைப்பை மோடி அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கிறார் ராமகோபாலன்.