

கிண்டி சிறுவர் பூங்காவுக்கு கடந்த மே மாத கோடை விடுமுறையில் 1 லட்சத்து 51 ஆயிரம் பார்வையாளர்கள் வந்துள்ளனர்.
கிண்டி சிறுவர் பூங்கா 2.7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மான்கள், 100-க்கும் மேற்பட்ட பறவையினங்கள். செந்நாய்கள், ஆமைகள், பல்வேறு இனங்களைச் சேர்ந்த பாம்புகள், குரங்குகள், மயில்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சென்னை மாநகரில் வண்டலூர் பூங்காவுக்கு அடுத்தபடியாக சிறுவர்கள் விரும்பி வரும் பூங்காவாக இப்பூங்கா விளங்கி வருகிறது. இங்கு கடந்த ஆண்டு கோடை விடுமுறையில் (மே 2014) 1 லட்சத்து 57 ஆயிரத்து 29 பார்வையாளர்கள் வந்துள்ளனர். இந்த ஆண்டு 1 லட்சத்து 51 ஆயிரத்து 478 பேர் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5 ஆயிரத்து 551 பேர் குறைவு.
இது தொடர்பாக பூங்கா அதி காரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சில ஆண்டுகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடுவதும், சில ஆண்டுகளில் குறைவதும் இயல்பு. அதனால் 5 ஆயிரம் பேர் குறைவு என்பதை குறைபாடாக கருத முடியாது’’ என்றார்.