Published : 29 Jun 2015 08:18 AM
Last Updated : 29 Jun 2015 08:18 AM

இளைஞர் உயிரிழப்பு சம்பவத்தால் ஆம்பூரில் கலவரம்; கடை, வாகனங்களுக்கு தீவைப்பு: கல்வீச்சில் எஸ்பி உட்பட 38 போலீஸார் காயம்

விசாரணைக்காக அழைத்துச் செல் லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்தவர்கள் ஆம்பூரில் பயங்கர வன்முறையில் ஈடுபட்டு வாகனங்கள், கடைகளுக்கு தீ வைத்தனர். கல் வீசி தாக்கியதில் வேலூர் எஸ்பி உட்பட 38 போலீஸார் காயமடைந்தனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த காதர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷமீல்அஹ்மது (26). ஆம்பூரில் உள்ள ஷூ கம்பெனி ஒன்றில் பணியாற்றினார். கடந்த மே 25-ம் தேதி வேலைக்குச் சென்ற பவித்ரா என்பவரை காணவில்லை என்றும், அவருடன் வேலை பார்த்த ஷமீல்அஹ்மது, பவித்ராவை அழைத்துச் சென்றதாகவும் அவரது கணவர் பழனி, போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் மார்டீன் பிரேம்ராஜ், கடந்த 15-ம் தேதி ஷமீல்அஹ்மதுவை விசாரணைக் காக அழைத்துச் சென்றார்.

விசாரணைக்குப் பின்னர் 4 நாட்கள் கழித்து வீடு திரும்பிய ஷமீல்அஹ்மத், போலீஸார் தாக் கியதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தாகக் கூறி வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர், கடந்த 26-ம் தேதி மாலை உயிரிழந்தார்.

இதையறித்த ஷமீல்அஹ்மது உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தை நேற்று முன் தினம் முற்றுகையிட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர்.

அவர்களிடம் ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் தீவிரமான தால் வேலூரில் இருந்து ஆயுதப் படை போலீஸார் வரவழைக்கப் பட்டனர். போராட்டக்காரர்களை போலீஸார் விரட்டியடித்தனர். சிதறி ஓடிய அவர்கள் போலீஸார் மீது கல் வீசத் தொடங்கினர். இதில் எஸ்பி செந்தில்குமாரி காயமடைந்தார்.

இந்த கலவரம் காரணமாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதில் சில வாகனங்களை கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கினர். சிலர், ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்துக்குள் புகுந்து, அங்கு வழக்கு தொடர்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனுக்கு தீ வைத்தனர். 30-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் சூறையாடப்பட்டன.

நிலைமை மோசமானதால் திரு வள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணா மலை மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 1,200 போலீஸார் ஆம்பூரில் குவிக்கப் பட்டனர். வேலூர் சரக டிஐஜி தமிழ்ச்சந்திரன், வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆம்பூருக்கு விரைந்து வந்தனர். சுமார் 5 மணி நேரம் கழித்து நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஷமீல் அஹ்மது உடலை, அவரது குடும்பத்தாரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். உடலைப் பெற்றுக் கொண்ட அவரது குடும்பத்தார், ஷமீலின் இறுதிச்சடங்கை தொடங்கினர். விடிய விடிய போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x