

பழநி வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திரம், வைகாசி விசாகத் திரு விழா மற்றும் கந்தசஷ்டி விழா உட்பட ஆண்டு முழுவதும் திரு விழாக்கள் கொண்டாடப்படு கின்றன.
இந்த கோயிலில் இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா கடந்த மே 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் முத்துக்குமார சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல் யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண உற்சவத் தில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாகத் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. மலைக்கோயில் சன்னதி நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு கோயிலில் இருந்து தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய் வானை ஆகியோர் தோளுக் கினியான் வாகனத்தில் தேரடி நிலைக்கு வந்தனர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேக மும் நடைபெற்றன. மாலை 4.30 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயில் தேரடி நிலையில் தேரோட்டம் தொடங்கியது. தேர் புறப்படும் முன் தேர் மீது பக்தர்கள் நவதானியங்கள், வாழைப்பழங்களை வீசி பக்தி பரவசமடைந்தனர்.
யானை கஸ்தூரி தேரை முட்டித் தள்ளியதையடுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பக்தர்களின் அரோகரா கோஷமும், சரண கோஷமும் விண்ணைப் பிளக்க தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்தது. முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.