

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் 13 பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன் விவரம்:
கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராகவும், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயகுமார் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாகவும் பணியமர்த்தப்படுகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாகவும், கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி பொன்.குமார் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாகவும், கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி திருவளர்செல்வி தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தமிழரசு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாகவும் (கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி எஸ்எஸ்ஏ பொறுப்பு), கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமசாமி கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாகவும், தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி முனுசாமி பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.
நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாகவும், கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஞானகவுரி சேலம் மாவட்டத்துக்கும் மாற்றப்படுகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அருள்முருகன் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாகவும், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சாந்தி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாகவும், சேலம் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி உஷா காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.