Published : 09 Jun 2015 08:18 AM
Last Updated : 09 Jun 2015 08:18 AM

ஓய்வின்றி அரசுப் பேருந்தை இயக்க நெருக்கடி: மதுரையில் ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி

ஓய்வின்றி அரசு பஸ்சை இயக்க மேலாளர் அளித்த நெருக்கடியை தாங்கமுடியாத ஓட்டுநர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். நள்ளிரவில் நடந்த இச்சம்பவத்தால் அதிகாரிகளைக் கண்டித்து 2 மணி நேரம் பணிமனையிலிருந்து பஸ்களை இயக்காமல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை புதூர் கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். நேற்றுமுன்தினம் மதியம் ஒரு மணிமுதல் இரவு 9.15 மணிவரை மதுரை நகருக்குள் வட்டப் பேருந்தை இயக்கினார். பணி முடிந்ததும் மாட்டுத்தாவணி நிலையத்தில் கிளை மேலாளர் தயாளகிருஷ்ணனிடம் ஓய் வெடுக்க செல்வதாகக் கூறியுள் ளார். ஞாயிற்றுக்கிழமை காரண மாக பயணிகள் கூட்டம் அதிக மாக உள்ளதால் கோவை, சேலம், விழுப்புரம், சென்னை என ஏதா வது ஒரு ஊருக்கு நகர் பேருந் தையே இயக்கும்படி மேலாளர் கூறியுள்ளார்.

முதல் நாளில் நெருங்கிய உறவினர் இறந்த நிலையில், விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்துள்ளேன். சோர்வாகவும், பசி யுடனும் இருப்பதால் தொடர்ந்து பஸ்ஸை இயக்க முடியாது என செந்தில்குமார் கூறிவிட்டார். ஒரு மணி நேரம்வரை வாக்குவாதம் நடந்த நிலையில், மதுரை பெரியார் பஸ் நிலையத்துக்கு நகர் பேருந்தை ஒருமுறை இயக்கும்படி மேலாளர் கூறினார்.

இந்த பணியை முடித்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் மேலாளரிடம் வந்த செந்தில்குமார் வீட்டுக்கு செல்வதாகக் கூறியுள் ளார். வெளியூருக்கு கண்டிப்பாக போக வேண்டும் என மேலாளர் தெரிவித்துள்ளார். தொலைதூரத் துக்கு இயக்கும் அளவுக்கு நகர் பேருந்தின் விளக்கு, பிரேக் உள்ளிட்டவை நல்ல நிலையில் இல்லை. ஓய்வே இல்லாமல், நல்ல நிலையில் இல்லாத பேருந்தை இயக்கினால் விபத்தில் சிக்கி இறப்பதை தவிர வேறு வழியில்லை என்றார். இதற்கு மேலாளர் கடுமையாக திட்டியதாக செந்தில்குமார் தெரிவித்தார்.

இதனால் மனம்வெறுத்த அவர் அருகில் ஆட்டோவுக்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து திடீரென தனது உடலில் ஊற்றி னார். பேருந்தை இயக்கி இறப்பதைவிட, தீக்குளித்தே இறக்கிறேன் என கூச்சலிட்டபடியே மேலாளரின் கையை பிடித்துக் கொண்டபடியே தீ வைக்க முயன் றார். அருகிலுள்ள சக ஓட்டுநர்கள் தீயை பற்றவைக்க விடாமல் செந்தில்குமாரை காப்பாற்றினர். அவர் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

செந்தில்குமாருடன் பணியாற் றும் சக ஓட்டுநர்கள் கூறுகையில், தினசரி ரூ.230 ஊதியத்தில் பணியாற்றுகிறோம். 240 நாட்கள் பணியாற்றினாலே பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். செந்தில் குமார் உட்பட பலரும் 800 நாள் தொடர்ந்து வேலை பார்த்தும் இன்னும் நிரந்தர ஊதியம் பெற முடியவில்லை. இதில் அக்கறை செலுத்தாத அதிகாரிகள் ஓய்வில் லாமல் வேலை வாங்குவதில் கடுமையாக நடந்துகொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள் ளனர். பொறுமை இழந்ததால் செந்தில்குமார் இந்த முடிவுக்கு சென்றார் என்றனர்.

புதூர் கிளை ஊழியர்கள் செந்தில்குமாருக்கு ஆதரவாக நேற்று காலை 5.30 மணி முதல் 7.30 வரை பஸ்களை இயக் காமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போக்குவரத்து கழக உயரதி காரிகள் பேச்சு நடத்தி போராட் டத்தை வாபஸ் பெறச் செய்தனர். உயர் அதிகாரிகள் பங்கேற்ற சமாதான கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது.

தொலைபேசியில் மேலாளர் தயாளகிருஷ்ணனை தொடர்பு கொண்டபோது அவர் கூறியது: சம்பவம் குறித்து துறைரீதியாக விசாரணை நடந்துவரும் நிலை யில், இது தொடர்பாக வேறு கருத்து ஏதும் தெரிவிக்க இயலாது. நிர்வாக நடவடிக்கைகள் குறித்து வெளியே சொல்லவும் கூடாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x