

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்த 3 சுயேட்சை வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
சண்முகம், சந்திரமோகன், சுப்பிரமணியன் ஆகிய மூவரும் மனுக்களை திரும்பப் பெற்றனர்.
மனுதாக்கல் செய்தவர்கள் போட்டியிட விரும்பவில்லையென்றால், மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை திரும்பப் பெற இன்றே கடைசி நாளாகும்.