அதிமுக அரசின் செயல்பாடுகள் பாஜகவுடன் கூட்டணி அச்சாரமே: சீமான் கருத்து

அதிமுக அரசின் செயல்பாடுகள் பாஜகவுடன் கூட்டணி அச்சாரமே: சீமான் கருத்து
Updated on
1 min read

அதிமுக அரசின் பல்வேறு நடவடிக் கைகளை பார்க்கும்போது அது வரும் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணிக்கு அச்சாரமிடுவது போலவே உள்ளது என்று தெரி வித்துள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் பொதுக் கூட்டத்துக்கு நேற்று கோவை வந்திருந்தார் சீமான். அதற்கு முன்னதாக அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

மாற்று அரசியலுக்கு வாக்கு அளிப்போம் என்கிற நோக்கத் தோடு முதற்கட்டமாக கோவையில் பிரச்சாரத்தை தொடங்குகிறோம்.

சென்னை ஐஐடி கல்லூரியில் மாணவர்கள் அமைப்புக்கு மத்திய அரசு அறிவித்த தடைக்கு எங்கள் கட்சியின் சார்பாக கண் டனம் தெரிவிக்கிறோம். இந்த விஷயத்தில் மாநில அரசு ஏன் தொடர்ந்து மெளனம் காக் கிறது? மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் திட்டத்துக்கு ஆதரவு, ரயில்வே பட்ஜெட்டுக்கு வரவேற்பு, 20 அப்பாவி தமிழர்களை ஆந்திரா அரசு கொன்றதுக்கு மத்திய மாநில அரசுக்கு கண்டனம் தெரிவிக்காதது போன்ற தமிழக அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, கூட்டணிக்கான அச்சாரமாகவே உள்ளது. கடந்த 4 ஆண்டு காலமாக தமிழக மக்க ளுக்கு எவ்வித திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.

மக்களை பாதிக்கும் பன்னாட்டு உணவுப் பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். இதற்காக விரைவில் தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட் டம் நடத்த உள்ளோம். மதுக்கடை களை மூடும் விஷயத்தில் தமிழக அரசுக்கு எவ்வித அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in