Published : 02 Jun 2015 07:42 AM
Last Updated : 02 Jun 2015 07:42 AM

மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தேர்வுக்குழு செயலாளர் நியமனம்

மருத்துவக் கல்வி இயக்ககத்தின் (டிஎம்இ) மாணவர் தேர்வுக்குழு செயலாளராக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் உஷா சதாசிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவக் கல்வி இயக்ககத்தின் (டிஎம்இ) மாணவர் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் (58). இவர் பணியில் இருந்து நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். 1984-ம் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்த இவர் மருத் துவக் கல்வி இயக்ககத்தின் மாணவர் தேர்வுக் குழு செயலாளராக 2012 மே மாதம் நியமிக்கப் பட்டார். அந்த பணியில் தொடர்ந்து 3 ஆண்டுகள் இருந்த சுகுமார் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து, மாணவர் தேர்வுக்குழு செயலாளராக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் உஷா சதாசிவன் நேற்று மாலை நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x