

திமுக தலைவர் கருணாநிதியை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான கே.வி. தங்கபாலு நேற்று சந்தித்துப் பேசினார். இருவரும் சுமார் 25 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
இது குறித்து தி இந்துவிடம் பேசிய தங்கபாலு, ‘‘கருணாநிதி தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ம் தேதி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வது வழக்கம். இந்த ஆண்டு 3-ம் தேதி நான் சென்னையில் இல்லாததால் இப்போது சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இருவரும் அரசியல்வாதிகள் என்பதால் பொதுவான அரசியல் நிலவரங்கள் குறித்தும், நாட்டு நடப்புகள் குறித்தும் பேசினோம்’’ என்றார்.