Published : 25 Jun 2015 09:44 AM
Last Updated : 25 Jun 2015 09:44 AM

பெருஞ்சாணியை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42 அடியை எட்டியதைத் தொடர்ந்து நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய நீர்தேக்கங்களாக விளங் கும் பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகள் உச்சநீர் மட்டத்தை எட்டியுள்ளன. கடந்த இரு மாதங்களில் பெய்த கோடை மழை மற்றும் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை போன்றவற்றால் அணைகள் நிரம்பி வருகின்றன.

அதிகரிக்கும் உள்வரத்து

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் ஏற்கெனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், 75 அடிக்கு மேல் நீர்மட்டம் உயராமல் இருக்கும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

பெருஞ்சாணி அணையில் நேற்றுமுன்தினம் மாலை திடீரென தண்ணீர் உள்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பாதுகாப்பு நட வடிக்கையாக 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் நேற்று அணைக்கு தண்ணீரின் வரத்து மேலும் அதிகரித்தது. விநாடிக்கு 1,823 கனஅடி தண்ணீர் வந்தது. அதேநேரம் அணை யின் நீர்மட்டம் 75.75 அடியாக இருந்தது. இதனால் உள்வரத் தைவிட அதிகமான தண்ணீரை வெளியேற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் அதிகளவு தண் ணீரை தாமிரவருணி ஆற்றில் திறந்துவிட்டால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே 300 கனஅடி தண்ணீர் மதகு வழியாக பாசனத்துக்கும், 2,000 கனஅடி உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டது. உபரிநீர் பரளி யாறு வழியாக விடப்பட்டது. இதைபோல் சிற்றாறு ஒன்றில் இருந்தும் 129 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் முகாம்

இந்நிலையில் 48 அடி கொள்ள ளவு கொண்ட பேச்சிப்பாறை அணை வெள்ள அபாய அளவான 42 அடியை நேற்று எட்டியது. பேச்சிப்பாறை அணைக்கும் நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதே நேரம் தண்ணீர் வெளியேற்றப் படவில்லை. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய இரு அணை களுமே வெள்ள அபாய கட்டத்தில் இருப்பதால் அங்கு பொதுப் பணித்துறை நீர்ஆதார அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.

நேற்று அதிகபட்சமாக சிற்றாறு ஒன்றில் 26.6 மி.மீ., பேச்சிப் பாறையில் 22.8, பெருஞ்சாணியில் 24.6 மி.மீ. மழை பெய்திருந்தது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் வெள்ள அபாய எச்சரிக்கையில் இருப்பதால் பாசன கால்வாய்கள் மற்றும் தாமிர வருணி கரையோரத்தில் தீயணைப்பு துறையினர் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாகர் கோவில், தக்கலை தீயணைப்பு நிலையங்களில் ரப்பர் படகு மற்றும் லைப்பாய், லைப்ஜாக்கெட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் ரப்பர் டியூப், காலி சிலிண்டர்கள், காலி கேன்கள் போன்ற மிதக்கும் பொருட்களை ஆற்றங்கரையோர மக்கள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு தீயணைப்பு துறையினர் அறி வுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x