தமிழக அரசில் கருணைத் தொகை பெறுவோருக்கான பஞ்சப்படி உயர்வு

தமிழக அரசில் கருணைத் தொகை பெறுவோருக்கான பஞ்சப்படி உயர்வு
Updated on
1 min read

பங்களிப்பு வருங்கால வைப்பு நிதியின் கீழ், இறந்தவரின் விதவை மனைவி மற்றும் குழந்தைகள், ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வராத பயனாளிகள் என அரசின் கருணைத் தொகை பெறுவோருக் கான பஞ்சப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசில் பங்களிப்பு வருங்கால வைப்பு நிதியின் கீழ் பணியாற்றி இறந்தவரின் விதவை மனைவி மற்றும் அவர் குழந்தை; ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வராத நிறுவனங்களைச் சேர்ந்த பயனாளிகள் மற்றும் முன்னாள் மாவட்ட கழக பணியாளர்கள் ஆகியோருக்கான அரசே முன்வந்து வழங்கும் கருணைத் தொகை கடந்த 2013-ம் ஆண்டு ரூ.605-லிருந்து ரூ. 645 ஆக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியான உத்தர வின்படி, இவர்களுக்கான பஞ்சப்படியை 2014 ஜனவரியில் 192 சதவீதமாகவும், ஜூலை மாதம் 204 சதவீதமாகவும், 2015 ஜனவரி முதல் 215 சதவீதமாகவும் மத்திய அரசு உயர்த்தியது.

மத்திய அரசைப் போலவே தமிழக அரசும் தற்போது இந்த பஞ்சப்படியை உயர்த்தி யுள்ளது. இதன்படி 645 ரூபாய் கருணைத்தொகை பெறுவோருக்கான உயர்த்தப்பட்ட பஞ்சப்படியை 2014-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிட்டு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in