

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் செல்ல முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்வதை எதிர்த்து சென்னை மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் ராயபுரத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை 14-ம் தேதி ஊர்வலம் நடத் தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஊர் வலத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து தடையை மீறி ஊர்வலம் நடத்தப் படும் என்று எஸ்டிபிஐ கட்சியினர் அறிவித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் ராயபுரம் இப்ராகிம் சாலையில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் இருந்து அக்கட்சித் தொண்டர்கள் 100 பேர் ஊர்வலமாக புறப்பட்டனர். வடக்கு கடற்கரை போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.