Published : 23 Jun 2015 07:33 AM
Last Updated : 23 Jun 2015 07:33 AM

பழைய வாகனங்களை வாங்குபவர்கள் ஆவணங்களில் பெயரை மாற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை: போக்குவரத்துத் துறை ஆணையரகம் எச்சரிக்கை

பழைய வாகனங்களை வாங்கு பவர்கள் அதற்கான ஆவணங் களில் பெயரை மாற்றாவிட்டால் மோட்டார் வாகன சட்டவிதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வாகனங்களின் எண் ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரு கிறது. இதேபோல், கார், இருசக்கர வாகனம் போன்ற பழைய வாகனங் களை வாங்கு வோரின் எண்ணிக்கை யும் அதிகரித்து வருகிறது. வாகனங் களை வாங்குவோர் அதற்கான ஆவ ணங்களையும் தமது பெயர்களில் மாற்றுவதில்லை. இதனால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறையின் ஆணையரக அதிகாரிகள் கூறும்போது, ‘‘பழைய வாகனத்தை வாங்குபவர் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண் ணப்பித்து அசல் பதிவுச் சான்றிதழில் தனது பெயர் இடம் பெறும் வகை யில் மாற்றிக்கொள்ள வேண்டும். வாக னத்தை விற்பனை செய்பவர் இதனை உறுதிப்படுத்த வேண்டும்.

முகவரி மாற்றத்தின் போது, வாகன உரிமையாளர் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்து தனது புதிய முகவரியை அசல் பதிவுச் சான்றிதழில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஆனால், பழைய வாகனங்களை வாங்கும் பெரும்பாலானவர்கள் தனது பெயருக்கு உரிமத்தை மாற்றிக்கொள் வதில்லை. சிலர் சாலை விபத்தில் சிக்கிக் கொண்டாலோ சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட் டாலோ அவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஆவ ணங்களில் பழைய உரிமையாளர் களின் பெயர்கள் இருப்பதால், அவர் களே பிரச்சினையில் சிக்கிக்கொள் கின்றனர். எனவே, வாகனங்களை வாங்கியவுடன் அவர்கள் ஆவணங் களை தனது பெயரில் மாற்றிக்கொள்ள வேண்டும். வாகனங்களில் ஆய்வு நடத்தும்போது பெயர் மாற்றாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ரூ.300 வரை அபராதமும் வசூலிக்கப்படும்’’ என்றனர்.

ஆவணங்களில் பழைய உரிமையாளர்களின் பெயர்கள் இருப்பதால், அவர்களே பிரச்சினையில் சிக்கிக்கொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x