

மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று 3 இடங்களில் செயல்முறை விளக்கம் அளித் தனர்.
முதல்கட்டமாக, புதுவண் ணாரப்பேட்டை தந்தை பெரியார் பூங்கா, திருவொற்றியூர் நெடுஞ் சாலை கிளை நூலகம் மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராயர் பூங்கா ஆகிய இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நேற்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந் தன.
அப்போது வாக்குப் பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பகுதி, வாக்குப் பதிவு செய்யும் பகுதி ஆகியவை குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்கு செலுத்தி பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். பொதுமக்களும் வாக்குப் பதிவு பகுதியில் பொத்தானை அழுத்தி, தங்கள் வாக்கு பதிவாவதை உறுதி செய்துகொண்டனர்.
இந்த தொகுதியில் வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக் கும் வகையில் பழைய வண் ணாரப்பேட்டை, வீராக்குட்டி தெரு, எம்சிஎம் கார்டன், ரத்தினசபாபதி தெரு, திருவொற்றியூர் நெடுஞ் சாலை ஆகிய பகுதிகளில் வருவாய்த் துறையினரும், நேரு யுவகேந்திரா இளைஞர் அமைப்பினரும் இணைந்து வீடு, வீடாகச் சென்று தேர்தல் விழா அழைப்பிதழ்களை வழங்கினர்.