மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண்: பிளஸ் 2 தேர்வில் திருச்சி மாணவி மாநில அளவில் இரண்டாமிடம்

மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண்: பிளஸ் 2 தேர்வில் திருச்சி மாணவி மாநில அளவில் இரண்டாமிடம்
Updated on
1 min read

பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில், மறுமதிப்பீட்டில் 5 மதிப்பெண்கள் கூடுதலாகக் கிடைத்ததால் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார் திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி சி.கவுசிகா.

சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சி.கவுசிகா பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் 1,186 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றிருந்தார். இவர் ஆங்கிலப் பாடத்தில் 193 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

இவர் தனது ஆங்கில விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்தார். இதில் கூடுதலாக 5 மதிப்பெண்கள் கிடைத்ததால் மொத்த மதிப்பெண்ணாக 1,191 பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் பாடத்தில் 197 மதிப்பெண்கள் பெற்றதால் பாடவாரியாக ஆங்கிலத்தில் முதலிடம் பெற்றார்.

மேலும், எஸ்.ஆர்.வி. பள்ளியில் படித்த மாணவர் எம்.முகேஷ்கண்ணன் மருத்துவக் கல்விக்கான தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற இருவரையும் பள்ளித் தலைவர் ராமசாமி, செயலாளர் சுவாமிநாதன், துணைத் தலைவர் குமரவேல், பொருளாளர் செல்வராஜ், இணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, பள்ளி முதல்வர் துளசிதாசன் ஆகியோர் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in