

சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி கடற்கரையை தூய்மைப் படுத்தும் பணியில் ராணுவ பயற்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை எலியட்ஸ் கடற்கரை யைச் சுத்தப்படுத்தும் பணியில் பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில் 500 ஆண், பெண் பயிற்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் கமாண் டன்ட் ரவீந்தர பிரதாப் சாஹி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘நமது கடற்கரைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள இளைஞர் கள், குழந்தைகள், பெண் கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதைப் பார்த்து ஏராளமான பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று எலியட்ஸ் கடற்கரையை சுத்தப்படுத்தினர்.
மேலும், இந்நிகழ்ச்சியின் மூலம் வீடு, பள்ளி மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், ராணுவ பயிற்சி மையத்தின் துணை கமாண்டன்ட் ஜி.முரளி பங்கேற்றார்.