Published : 01 Jun 2015 07:51 AM
Last Updated : 01 Jun 2015 07:51 AM

அண்ணாமலையார் கோயிலில் இடைத்தரகர்கள் அட்டூழியம்: நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய் கின்றனர். பவுர்ணமி, பிரதோஷம், கார்த்திகை தீபம், சிவராத்திரி போன்ற நாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை பன்மடங்கு அதிக மாக இருக்கும். அப்போது, பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இந்த சந்தர்ப்பத்தை இடைத்தரகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின் றனர்.

அண்ணாமலையார் கோயி லில் இடைத்தரகர்கள் அட்டூழி யம் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. அதிகார மையத் தில்உள்ளவர்கள் மற்றும் அவர் களது பெயர்களில் வரும் நபர்கள் மற்றும் உறவினர்களை, கூட்டம் இருந்தாலும், முக்கிய வழியில் அழைத்துச் சென்று எளிதாக சாமி தரிசனம் செய்து வழியனுப்பி வைப்பது இடைத்தரகர்களின் பணியாகும். அப்போது அவர் களுக்கு தக்க சன்மானம் வழங் கப்படும். அதேபோல், வசதி படைத்தவர்களும் சாமி தரிசனம் செய்ய இடைத்தரகர்களை நாடுகின் றனர். ஒவ்வொரு பவுர்ணமி நாட்களில் மட்டும், ஒரு இடைத்தர கர் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிப் பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

சிவ பக்தர்கள் கூறும்போது, “சாதாரண பக்தர்களால் விஷேச காலங்களில் சாமி தரிசனம் செய்ய முடியாது. மகா கார்த் திகை தீப திருவிழாவில் அர்த்த நாரீஸ்வர் காட்சியை ஏழை எளிய மக்கள் பார்க்க முடியாது. பவுர்ணமி போன்ற விஷேச நாட் களில் இடைத்தரகர்களை அணுகி னால் சாமி தரிசனம் எளிதாக கிடைக்கும் என்ற நிலை உருவாக் கப்பட்டுள்ளது.

இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டும் என்ற பல முறை கோரிக்கை விடுத்தும் பல னில்லை.

இடைத்தரகர்கள் ஏதோ வெளியில் இருந்து வருகிறார் கள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் கோயிலில் இருப்பவர்களே. அமர்வு தரிசனத் திலும் முறைகேடுகள் நடக்கிறது. இடைத்தரகர்கள் ஈட்டும் பணத்தை, மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு சரியாக பங்கிட்டு கொடுப்பதால் சுதந்திரமாக வலம் வருகின்றனர்.

மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாரும், சில நேரங்களில் இடைத்தரகர்களாக மாறிவிடுகின்றனர். அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்கின்றனர். இந்த அவலநிலை மாற வேண்டும். கடவுள் முன்பு அனைவரும் சமம் என்று உணர வேண்டும்.

பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் ஒருவரை கஷ்டப்படுத்தி, குறுக்கு வழியில் சென்று தரிசனம் செய்தவதால் எந்த பலனும் கிடைக்காது. இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும். அண்ணாமலையார் தரிசனம், அனைவருக்கும் எளிதாக கிடைக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x