

வேலூரில் அம்மன் கோயில் கும்பா பிஷேக பணிக்காக பள்ளம் தோண் டும் போது, சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது.
வேலூர் கஸ்பா அப்பாதுரை தெருவில் ஜலகண்டேஸ்வரி ஆலயம் உள்ளது. அப்பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோயில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்காக கோயில் வளாகத்தை சுற்றிலும் டைல்ஸ் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோயில் மூலவர் அறையில் டைலஸ் பதிக்க கட்டிட தொழி லாளர்கள் பள்ளம் தோண்டும் போது அங்கு 2 அடிக்கு சுரங்கப்பாதை தென்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கட்டிட தொழிலாளர்கள் புதையல் இருக்குமோ என எண்ணி, பள்ளத்தை தோண்ட முயன்றனர். அந்த பள்ளம் ‘L’ வடிவில் 4 அடி ஆழம் வரை சென்றது.
இதுகுறித்து கோயில் நிர்வாகி களுக்கு கட்டி தொழிலாளர்கள் தகவல் அளித்தனர். அவர்கள் வந்து பார்வையிட்டனர். பின்னர், வேலூர் தொல்லியல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோயி லில் சுரங்கப்பாதை இருந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது.
இதைத்தொடர்ந்து, வேலூர் தொல்லியல் துறை யினர் கோயிலில் உள்ள சுரங்கப் பாதையை ஆய்வு செய்தனர். அது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டப்பட்ட சுரங்கப்பாதை என கண்டறியப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து ஆய்வு செய்து, சுரங்கப்பாதை எதுவரை செல்கிறது என்பது பின்னர் கண்டறியப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.