

கொத்தடிமைகள் மீட்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 3,776 கொத்தடிமைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தொத்தடிமை களை ஒழிக்கும் சட்டம் 1976-ம் ஆண்டு கொண்டுவரப் பட்டது. அதன்படி, நாட்டில் இதுவரை மொத்தம் 2.94 லட்சம் கொத்தடிமைகள் மீட்கப் பட்டுள்ளனர். இதில் தமிழகத் தில் மட்டும் 65,573 பேர் மீட்கப் பட்டுள்ளனர் என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள் ளது.
கொத்தடிமைகளின் நிலை மற்றும் அவர்களது வாழ்க்கை குறித்து கடந்த 3 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துவரும் சென்னை தாம்பரத்தை சேர்ந்த எம்.தேவசித்தம் தகவலறியும் சட்டத்தின்படி சில தகவல்களை பெற்றுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு களில் மொத்தம் 3,776 கொத்த டிமைகள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 20 சதவீதம் கொத்தடிமைகள் அதிகரித்துள்ளனர். எனவே, மீட்கப்படும் கொத்தடிமைகளுக் கான மறுவாழ்வு திட்டங்களை தமிழக அரசு முழுமையாக செய்ய வேண்டும்’’ என்றார்.
இது தொடர்பாக இன்டர்நேஷ னல் ஜஸ்டிஸ் மிஷன் இயக்குநர் (ஆராய்ச்சி) தா.குறள் அமுதனிடம் கேட்ட போது, ‘‘முன் பெல்லாம் செங்கல் சூளை, அரிசி ஆலை போன்ற இடங்களில் அதிகமாக கொத்தடிமைகள் இருந்தனர். ஆனால், இப்போது டெக்ஸ்டைல், மீன்வளர்ப்பு, இறால் வளர்ப்பு போன்ற இடங் களிலும் கொத்தடிமைகள் இருக் கின்றனர். வடமாநிலங்களில் இருந்து ஒருவரை அழைத்து வர இடைத்தரகர்கள் ரூ.1000 வரை கமிஷன் வசூலிக்கிறார்கள். கொத்தடிமைகளை அடையாளம் கண்டு மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. மீட்கப்படும் கொத்தடிமைகளுக்கு உடனடி செலவுக்காக ஆயிரம் ரூபாய் வழங்கப் படுகிறது.
கொத்தடிமைகளுக்கான மறு வாழ்வு திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இல்லா விட்டால் அவர்கள் மீண்டும் கொத் தடிமைகளாக மாறும் அபாயம் உள்ளது. மேலும், கொத்தடிமை களை மீட்கவும், மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தவும் ஏற்கெனவே சிறப்பு அதிகாரி ஒருவர் இருந்தார். அந்த இடம் தற்போது காலியிடமாக இருக்கிறது. இந்த காலிப்பணியிடத்தை நிரப்பி திட்டங்களை செயல்படுத்தினால், கொத்தடி மைகளே இல்லாத தமிழகமாக உருவாக்க முடியும்’’ என்றார்.