

பேரிடர் காலங்களில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள் வது குறித்த பயிலரங்கம் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது. இதை மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று தொடங்கி வைத்தார்.
பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிலரங்கம் நடந்தது.
இதன்படி பேரிடர் அவசர காலங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், இதர பணியாளர்கள் விபத்து நடந்த இடத்தில் தங்களது பணியை எவ்வாறு தொடங்க வேண்டும், விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி அளித்து உயிர்களை காப்பாற்றுவது மற்றும் காயத்தின் தன்மைகேற்ப அவர்களை பிரித்து விரைவாக சிகிச்சை அளிப்பது ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப் பட்டது.
வானிலை முன்னெச்சரிக்கை
மேலும், அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களை விபத்து நடந்த இடத்திலிருந்து விரைவாக மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது.வானிலை முன்னெச்சரிக்கை, இஸ்ரோ அமைப்புகளின் அறிவுரைகளை ஏற்று பேரிடர்கள் வருவதற்கு முன்னரே மீட்பு பணிகள் தொடர்பான மேலாண்மைகளை வகுப்பது தொடர்பான பயிற்சி மற்றும் அறிவுரைகள் இந்தப் பயிலரங்கில் வழங்கப்பட்டது.
இதில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் முரளிகிருஷ் ணன், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஐசக் கிரிஸ் டியன், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப் பாளர் சசிகலா, மாவட்ட குடும்ப நல துணை இயக்குநர் விஜய குமார், செங்கல்பட்டு மருத்து வக் கல்லூரி குழுவினர் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட் டியினர் கலந்து கொண்டனர்.