அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்க சமக தேர்தல் பணிக்குழு நியமனம்

அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்க சமக தேர்தல் பணிக்குழு நியமனம்
Updated on
1 min read

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழுவை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவுக்காக பிரச்சாரப் பணிகளில் ஈடுபட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சமக துணைத் தலைவர் ஏ.நாரா யணன் எம்எல்ஏ, பொதுச்செய லாளர் கரு.நாகராஜன், பொரு ளாளர் ஏ.என்.சுந்தரேசன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.ஜெயப்பிரகாஷ், தலைமை நிலையச் செயலாளர் ஐஸ் ஹவுஸ் தியாகு, சென்னை மண்டலச் செயலாளர் மற்றும் வடசென்னை மாவட்ட செயலா ளர் எம்.ஏ.சேவியர், அரசியல் ஆலோசகர் த.ராஜசேகர், இளை ஞரணி செயலாளர் சாம் மாத்யூ உள்ளிட்டவர்கள் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in