

தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டிட வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நன்கு ஆய்வு செய்ய வேண்டும் என்று உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன், அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஊராட்சி ஒன்றியம், அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் களின் கல்வித்தரத்தை மேம் படுத்தும் வகையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து வகுப்பு களுக்கும் சென்று மாணவர்களின் கற்றல் திறன், வாசிப்புத்திறன், எழுதும் திறன், பொது அறிவுத்திறன் ஆகியவற்றை அறிய வேண்டும். தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் பள்ளிக்குவராத குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கு வர வழைக்க ஆசிரியர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நன்கு ஆய்வுசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பிகள், பழுதடைந்த கட்டிடங்கள் போன்றவை குழந்தைகளுக்கு பாதுகாப் பற்றதாக இருந்தால் அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதி திராவிடர்கள், மிகவும் பின்தங்கிய மற்றும் சீர்மரபினர், சிறுபான்மையினர் ஆகியோ ருக்கான கல்வி உதவித்தொகை உரிய மாணவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.