Published : 11 Jun 2015 08:03 AM
Last Updated : 11 Jun 2015 08:03 AM

ரசாயன தொழிற்துறையின் பேரிடர் தயார் நிலை குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்

பேரிடர் காலங்களில் ரசாயன தொழிற்சாலைகளின் தயார் நிலை குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கட்டி டத்தில் நடைபெற்ற இந்த ஒருங் கிணைப்புக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ரசாயன தொழிற்துறை பேரிடர் மேலாண்மை நிபுணர் அமித்து டேஜா கலந்துகொண்டு பேசிய தாவது:

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் இந்தி யாவில் 40 ஆயிரத்துக்கும் மேற் பட்ட அபாயகரமான தொழிற் சாலைகள் கண்டறியப் பட்டுள்ளன. நாடு முழுவதும் 25 மாநிலங்களில், 301 மாவட்டங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 1,861 பெரிய அளவிலான விபத்து நிகழும் வாய்ப்புள்ள அலகுகள் உள்ளன.

இதன் அடிப்படையில், தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட் டத்தில் அதிக அளவில் பெரிய தொழிற்சாலைகள் அமைந்துள் ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், ரசாயன தொழிற் துறையின் பேரிடர் தயார் நிலை குறித்து மாவட்ட அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் ரசாயன ஆலைகள் குறித்து, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதுவே இந்த ஒருங் கிணைப்பு கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூத்த நிபுணர் மேஜர் ஜெனரல் வி.கே.தத்தா, அரசு துறைகளின் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் ஆலைகளின் பிரதிநிதிகள், அரக்கோணத்தில் உள்ள ராஜாளி பட்டாலியன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x