

காணாமல் போன விமானத்தின் சிக்னல் விட்டு விட்டு கிடைப் பதால், விமானத்தை கண்டுபிடிப் பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் தேடும் பணியில் ஈடுபடவுள்ள ரிலையன்ஸ் ஆராய்ச்சிக் கப்பல், விமானத்தை கண்டுபிடிக்கும் என்று கடலோர காவல்படை (கிழக்கு பிராந்தியம்) ஐஜி எஸ்.பி.ஷர்மா தெரிவித்தார்.
சென்னையில் கடலோர காவல் படை அலுவலகத்தில் நேற்று அவர் கூறியதாவது: கடந்த ஜூன் 8-ம் தேதி ரோந்து சென்ற கடலோர காவல் படையின் சிறிய ரக விமானத் தின் சிக்னல் சென்னையில் இருந்து தென் கிழக்கே 95 கடல் நாட்டிகல் மைல் தொலைவிலும், சிதம்பரத்திலிருந்து 16 கடல் நாட்டிகல் மைல் தொலைவிலும் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நீர் மூழ்கி கப்பல் ‘சாகர் நிதி’ கடந்த 14-ம் தேதி முதல் கடல் நீருக்கடியில் தேடி வந்தது. காணாமல் போன விமானத்திலிருந்த கருவியிலிருந்து சிக்னல் விட்டு விட்டு கிடைப்பதால் விமானத்தை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கப்பல் ‘ஒலிம்பிக் கெனைன்’ உதவியை நாடியிருக்கி றோம். இது காக்கிநாடாவிலிருந்து புறப்பட்டுவிட்டது.
அது 19-ம் தேதி காலையிலிருந்து தனது தேடும் பணியை தொடங்க விருக்கிறது. இது 1000 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் உள்ள பொருட்களை கண்டுபிடிக்கும் திறன் உடையது. இதன் கேமரா மிகத் துல்லியமாக படம் எடுக்கும் திறனை உடையது. இந்த கப்பல் காணாமல் போன விமானத்தை கண்டுபிடித்துவிடும் என நம்பு கிறேன்.
காணாமல் போன விமானத் தில் சென்ற வீரர்களின் குடும்பத் தாரிடம் சற்று முன் உரையாடி னேன். விமானத்தை தேட நாங்கள் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்கு விளக்கினேன். அவர்களும் தேடும் பணி திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.