

தமிழகத்தில் அஜினோ மோட்டோ உப்பை தர பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என, இந்திய நுகர்வோர் உரிமை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அதன் தலைவர் ஆ.சங்கர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமாரை நேரில் சந்தித்து அளித்த மனு விபரம்:
தமிழகத்தில் மேகி நூடுல்ஸில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோனோ சோடியம் குளுட்டமேட் அதிகம் கலந்திருப்பதை அறிந்து அதன் விற்பனையை முற்றிலும் தடை செய்ததற்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனால் முழுவதுமே மோனோ சோடியம் குளுட்டமேட் உள்ள கெமிக்கல் உப்பை அஜினோ மோட்டோ என்ற நிறுவனம் தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
இது 12 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உகந்ததல்ல என பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த உப்பில் எவ்வளவு சதவீதம் மோனோ சோடியம் குளுட்டமேட் கலக்கப்பட்டுள்ளது என்பது எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
இந்த சுவைகூட்டும் உப்பானது கல்யாண வீடுகள் முதல் சாலையோரங்களில் செயல்படும் சாதாரண பாஸ்ட்புட் கடை வரை மிகச் சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது.
எனவே, நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அஜினோ மோட்டோ பாக்கெட்டுகளை தரப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் விற்பனையை தமிழகத்தில் உடனடியாக தடை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுவைகூட்டும் உப்பானது கல்யாண வீடுகள் முதல் சாலையோரங்களில் செயல்படும் சாதாரண பாஸ்ட்புட் கடை வரை மிகச் சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது. இது 12 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உகந்ததல்ல என பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.