Last Updated : 07 Jun, 2015 10:22 AM

 

Published : 07 Jun 2015 10:22 AM
Last Updated : 07 Jun 2015 10:22 AM

2016-ல் அதிமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும்: தமிழருவி மணியன் திட்டவட்டம்

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் மையால் 2016-ல் அதிமுகதான் ஆட்சிக்கு வரும் என்று `தி இந்து’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன்.

முதலில் வைகோவையும், பிறகு வாசனையும் முன்னிறுத்தி அணி அமைக்க முயன்று, பின்னர் அதை கைவிட்டது ஏன் என்பதற் கான விளக்கத்தையும் தனது பேட்டி யின்போது அவர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் களம் எப்படி யிருக்கும் என்று கருதுகிறீர்கள்?

மக்களவைத் தேர்தலில் அமைந் ததைப்போல, இந்தத் தேர்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பே கிடையாது. அப்படி யொரு மாற்று அணியை அமைக்கிற தாகமோ, தவிப்போ தமிழகத்தில் எந்த கட்சிக்கும் இல்லை. அதிமுக, திமுக என்று இரு அணிகளே களத்தில் இருக்கும். மத்தியில் ஆளும் பாஜககூட, போயஸ் கார் டன் கதவு திறக்கப்பட்டால் உள்ளே நுழையும் கனவோடு காத்திருக்கிறது. அவ்வாறு திறக்கப் படாவிட்டால்தான், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது பற்றி பாஜக யோசிக்கும். பாஜக வின் முடிவைப் பொருத்தே திமுக, அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை விஜயகாந்த் எடுக்க முடியும்.

வழக்கறிஞர் என்ற முறையில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வோம் என்று இவ்வளவு தாமத மாக அறிவித்திருப்பதே ஜெயலலி தாவுக்கு கர்நாடக அரசு செய் துள்ள மறைமுக உதவிதான். தீர்ப்பு வெளியான இரண்டாவது, மூன்றாவது நாளே மேல்முறையீடு செய்திருந்தால், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க இடைக்காலத் தடையைப் பெற் றிருக்க முடியும். இப்போது அந்த வாய்ப்பு பறி போய்விட்டது.

உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெ னவே தேங்கிக்கிடக்கும் ஆயிரக் கணக்கான மேல்முறையீட்டு வழக்குகளில் ஒன்றாகவே இது கருதப்படும். திமுக, தேமுதிக ஆசைப்படுவதுபோல நாளைக்கே விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டு, நாளை மறுநாளே தீர்ப்பு வரப்போவதில்லை.

அதிமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஏற்கெனவே சொன்னீர்கள். அந்தக் கருத்தில் மாற்றம் உள்ளதா?

2016-ல் அதிமுகதான் ஆட்சிக்கு வரும். ஜெயலலிதாவின் ஆளு மையோ, நிர்வாகத் திறமையோ அதற்கு காரணமாக இருக் காது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை யின்மைதான் காரணமாக இருக் கும். இக்கருத்தை நான் தொடர்ந்து கூறுவது, அதிமுக ஆட்சிக்கு வரு வதை விரும்புகிறேன் என்று அர்த்தமாகாது. என்னைப் பொறுத்த வரையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளில் எதை ஏற்றுக் கொண்டாலும், நாமும் ஊழலுக்கு உடன்பட்டவர்கள் என்றே பொருள்.

மோடி பிரதமர், வைகோதான் முதல் வர் என்றீர்கள். பாஜக ஆட்சி அமைந் ததும் அந்த அணியில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய நீங்கள், வைகோவையும் வெளியேறச் சொன்னீர்கள். இப்போது நீங்களும் வைகோவை கைவிட்டுவிட்டீர்களே?

ஒவ்வொருவரிடமும் நாங் கள் பெற்றிருக்கிற கசப்பான அனுபவம்தான் இந்த முடிவுக் குக் காரணம். அந்தக் கார ணத்தை வெளிப்படுத்தவோ, பறை சாற்றவோ நான் விரும்பவில்லை. அவசரப்பட்டு யார் மீதும் எந்தப் பழியும் சுமத்த விரும்பவில்லை. இனிமேல் எந்தத் தனி நபரையும் முன்னிறுத்தவோ, அவர்களுக்கு இரவல் குரல் கொடுக்கவோ கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

ஜி.கே.வாசன் இன்னொரு காமராஜ ராக உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள். ஆனால், அவர் அதிமுகவை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகிறதே?

திமுக, அதிமுகவுக்கு எதி ராக சத்திய வேள்வி நடத்த பல ருக்கும் தயக்கம் இருக்கிறது. குறைந்தபட்ச சட்டமன்ற உறுப்பின ரையாவது பெற்று, கட்சியின் அங்கீகாரத்தையும், சின்னத்தையும் தக்க வைத்துக் கொள்வதுதான் ஒவ்வொரு கட்சிக்கும் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. கட்சி யின் எதிர்காலம், தொண்டர்களின் நலம் சார்ந்து அவர்கள் அப்படிச் சிந்திப்பதை நான் குறைகூற முடியாது. இவர்களைப் போல நதியின் போக்கில் படகு விடுபவர் கள் அல்ல நாங்கள். எதிர்நீச்சல் போடவே விரும்புகிறோம்.

காந்திய மக்கள் இயக்கம் இந்தத் தேர்தலில் போட்டியிடும் என்பதை ஏற்கெனவே சொல்லிவிட்டீர்கள். எந்த அணியில், எத்தனை இடங் களில் போட்டியிடுவதாக உத்தேசம்?

காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக ஆகிய 4 கட்சிகளும் இல் லாத அணி ஒன்று அமைந்தால், அதில் நாங்களும் இடம்பெறுவோம்.

அணி அமையாவிட்டால், தனி யாக களம் காண்போம். குறிப்பிட்ட தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவிப்போம்.

ஜூலை 19-ம் தேதி திருப்பூரில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறும். யார் வந்தாலும், வராவிட்டாலும் மறுதினமே நாங்கள் தனியாக தேர்தல் வேலையைத் தொடங்கிவிடுவோம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிராஃபிக் ராமசாமிக்கு ஆதரவு தருவீர்களா?

டிராஃபிக் ராமசாமியை நாங்கள் நிராகரிக்கிறோம். ஜெயலலிதாவின் ஊழலை எதிர்க்க, கருணாநிதியிடம் கை ஏந்தியதிலேயே, அவர் தன் னிலை தாழ்ந்துவிட்டார். ஊழலை எதிர்ப்பதற்கான தார்மிகத் தகுதி யையும் இழந்துவிட்டார். எனவே, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரையே நாங்கள் ஆதரிப்போம்.

மற்ற கட்சிகள் எப்படியோ, திமுக இந்தத் தேர்தலை புறக்கணித் திருக்கக் கூடாது. பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே. அதைப் போல, வாக்காளர்களுக்குப் பணம் எப்படிப்போகும் என்று அனைத்து வழிகளையும் அறிந்த திமுக, அந்தத் தவறுகளை தடுத்து நிறுத்தவும், மக்களிடம் வெளிப்படுத்தவுமாவது ஒரு வேட்பாளரை நிறுத்தியிருக் கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x