Published : 23 Jun 2015 07:16 AM
Last Updated : 23 Jun 2015 07:16 AM

பழ.நெடுமாறனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நன்றி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சி.மகேந்திரனுக்கு ஆதரவு தெரி வித்துள்ள தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, வெல்ஃபர் பார்ட்டி ஆப் இந்தியா ஆகிய கட்சிகளும் சி.மகேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x