

ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டில் 10 மாவட் டங்களில் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த 5-ம் தேதி தொடங்கி தமிழகத்தில் பரவ லாக பெய்து வருகிறது. தென் மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத் துக்கு பொதுவாக அதிக மழை கிடைக் காது என்ற போதும் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்துள்ளது. கடந்த 2 வாரங்களில் பெய்த மழையை பொறுத்த வரை, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருநெல் வேலி, திருவள்ளுர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.
சென்னையில் 26.9 மி.மீ. மழை பெய் யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13.3 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள் ளது. விழுப்புரத்தில் 24.7 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 10.4 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. திருநெல்வேலியில் 2 வாரங்களில் 2.6 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.
ஆனால், ஈரோடு மாவட்டத்தில் சரசாரி யான மழை அளவான 18.2 மி.மீ. விட 150 சதவீதம் அதிகமாக 45.5 மி.மீ. பெய் துள்ளது. திருப்பூரில் 30.8 மி.மீ., நீலகிரி யில் 64.3 மி.மீ., கோவையில் 25.2 மி.மீ., சேலத்தில் 58 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த மாவட்டங்களிலும் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.