

பாளையங்கோட்டை மத்திய சிறை யிலிருந்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேற்று விடுவிக்கப்பட்டார்.
திருநெல்வேலி வேளாண் பொறியியல்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகி யோர் கைது செய்யப்பட்டு பாளை யங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறை யில் இருந்த அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களது ஜாமீன் மனுக்கள் 2 முறை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தன.
முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த் திக்கு முக்கிய பங்கு இருப்ப தாகவும், ஜாமீனில் அவரை விடு வித்தால் சாட்சியங்களை அவர் கலைக்கக்கூடும் என்றும் சிபிசிஐடி போலீஸார் தரப்பில் நீதிமன்றத் தில் ஆட்சேபம் தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இந்த வழக்கில் 60 நாட்களாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அக்ரி கிருஷ்ண மூர்த்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை நேற்றுமுன்தினம் உத்தர விட்டது.
இதையடுத்து நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சிறையிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுவிக் கப்பட்டார். அப்போது அவரை திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள ஆதரவாளர்கள் சிலர் வரவேற்றனர். பின்னர் அவர் காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.