செம்மொழி மாநாட்டையொட்டி வழங்கிய வீட்டுமனையை தரவில்லை: தேவநேயப் பாவாணரின் பேத்தி பரபரப்பு புகார்

செம்மொழி மாநாட்டையொட்டி வழங்கிய வீட்டுமனையை தரவில்லை: தேவநேயப் பாவாணரின் பேத்தி பரபரப்பு புகார்
Updated on
1 min read

2010-ம் ஆண்டு கோவை உலக தமிழ் செம்மொழி மாநாட்டை யொட்டி, தமிழக அரசு கொடுத்த வீட்டுமனைப் பட்டாவுக்கான நிலத்தை, தற்போது வரை கண் ணில் காட்டவில்லை என தமிழ் அறிஞர் மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணரின் பேத்தி தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவரிடம் நேற்று புகார் தெரி வித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த தேவநேயப் பாவாணர் இலக் கணம், மொழி, பண்பாடு, விளை யாட்டு, இசை மற்றும் வரலாறு பற்றிய ஏராளமான நூல்களை எழுதி உள்ளார். இவரது தமிழ் சேவையை பாராட்டி, மதுரையில் இவருக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்டியுள்ளது.

2010-ம் ஆண்டு கோவையில் நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, தேவநேய பாவாணரின் வாரிசுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

தேவநேயப் பாவாணரின் பேத்தி எஸ்தர் செல்வமணிக்கு தமிழக அரசு இரண்டே முக்கால் சென்ட் வீட்டுமனை பட்டா வழங்கியது. அப்போது திண்டுக்கல் ஆட்சிய ராக இருந்த வள்ளலார், எஸ்தர் செல்வமணியை அழைத்து வீட்டு மனைப் பட்டாவை வழங் கினார். பட்டா கொடுத்ததோடு சரி, தற்போது வரை அதற்கான நிலத்தை அதிகாரிகள் அவருக்கு வழங்கவே இல்லை.

அதனால், திண்டுக்கல்லில் நேற்று சிறுபான்மையினர் சமூக மக்களின் குறைகளை கேட்க வந்த தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பேராயர் எம்.பிரகாஷிடம் எஸ்தர் செல்வ மணி, அரசு வழங்கிய வீட்டுமனை பட்டாவுக்கான நிலத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.

இதுகுறித்து எஸ்தர் செல்வ மணி கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டாக ஒவ்வொரு இடத்துக் காக வட்டாட்சியர், வி.ஏ.ஓ., எங்களை அழைத்துச் சென்று இடத்தைக் காட்டுவர். ஆனால், வீட்டுமனை நிலத்தை தரமாட்டார் கள். கடைசியாக, தற்போது அதிகாரிகள் உங்களுக்கு நிலம் தர முடியாது எனச் சொல்லிவிட்டனர். அதனால், மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளோம். இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம், ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இனியும் தராவிட்டால் காகிதத்தில் கொடுத்த வீட்டுமனைப் பட்டாவை திருப்பி அரசிடமே ஒப்படைக்கும் மனநிலைக்கு வந்துவிட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவரது புகாரை பெற்றுக் கொண்ட சிறுபான்மை ஆணையத் தலைவர் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உத்தமனை அழைத்து விசாரித்து, விரைவில் நிலத்தை வழங்க உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in